Cuddalore Crocodile | ஊருக்குள் புகுந்த முதலையை வேடிக்கை பார்க்க சென்ற 2 பேருக்கு நடந்த கொடூரம்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே ஊருக்குள் புகுந்த முதலை, வேடிக்கை பார்க்க சென்ற இருவரை கடித்து குதறியது. முதலை கடித்ததில் படுகாயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் முதலையை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.