சிதம்பரம் அருகே வலையில் சிக்கிய முதலை
சிதம்பரம் அருகே கே.ஆடுர் கிராமத்தில் குளத்தில் மீனுக்கு விரித்த வலையில் முதலைக் குட்டி சிக்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சுமார் 5 அடி நீளமும் 30 கிலோ எடையும் கொண்ட அந்த முதலைக்குட்டியை பாதுகாப்பாக கட்டி வனத்துறையிடம் மக்கள் ஒப்படைத்தனர். அந்த குளத்தில் ராட்சச முதலை இருப்பதாகவும், வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...