டெம்னார்க் தலைநகர் கோபன்ஹேகனில், சுமார் 50 ஜோடிகள் அந்நாட்டின் பாரம்பரிய திருவிழாவின் போது வித்தியாசமான முறையில் திருமணம் செய்துகொண்டது பலரின் கவனத்தை ஈர்த்தது. டென்மார்க்கின் பாரம்பரியத்தை கொண்டாடும் “கோல்டன் டேஸ்“ விழா, டென்மார்க்கின் பல்வேறு பகுதிகளில் சுமார் இரண்டு வாரம் நடக்கும். இந்நிலையில், “அன்பு“ எனும் கருப்பொருளில் இந்த ஆண்டு நடக்கும் இந்த விழாவில், கோட்டைகள், கப்பல்களில், பேய் வேடமணிந்து ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர். இந்த விழாவில் திருமணம் செய்துகொண்டது, கனவு போல் இருந்ததாக, அதில் பங்கேற்ற ஜோடிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.