Coimbatore College Girl Issue | கோவை சம்பவம் - 3 கொடூரன்களையும் காட்டி கொடுத்து கதறவிட்ட `அம்மன்’
கோவை விமான நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை மூன்று பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கி, பாலியல் கொடுமை செய்துவிட்டு தப்பிச் சென்றது. தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தில், குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து, பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய மூவரும், துடியலூர் வெள்ளக்கிணறு பட்டத்தரசி அம்மன் கோயில் அருகே பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்கச் சென்றபோது, தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் போலீசாரை தாக்கினர். இதில், சந்திரசேகர் என்ற தலைமைக் காவலருக்கு இடதுகையில் காயம் ஏற்பட்டது. தப்பியோட முயன்ற மூவரையும் போலீசார் சுட்டுப் பிடித்தனர். பிடிபட்ட மூவரும், பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய குணா என்கின்ற தவசி, சதீஷ் என்கின்ற கருப்பசாமி, கார்த்திக் என்கிற காளீஸ்வரன் என்பது விசாரணையில் தெரியவந்தது. மூவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.