Kovai News | ஆய்வுக்கு வந்த கோவை கலெக்டர் - முகம் சிவந்து ஆதங்கத்தை கொட்டி தீர்த்த பெண்
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து, அப்குதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற மாவட்ட ஆட்சியர் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, நோயாளி ஒருவர் ரத்த பரிசோதனை தொடர்பான புகார்களை முன்வைக்க மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து, சுற்றுவட்டார பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனை, நுகர்பொருள் வாணிபக் கிடங்கு, நியாய விலை கடை, அங்கன்வாடி மையம் உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று ஆட்சியர் ஆய்வு செய்தார்.