முதலமைச்சர் ஸ்டாலினை, சென்னை தலைமைச் செயலகத்தில், அரிட்டாபட்டி போராட்டக்குழுவினர் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர். டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்ய அழுத்தம் கொடுத்தவர் முதலமைச்சர் என்று டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டக்குழுவினர் தெரிவித்தனர். பாராட்டு விழாவிற்கான அழைப்பிதழை முதல்வரிடம் வழங்கிய நிலையில், நாளை பாராட்டு விழாவிற்கு வருவதாக முதல்வர் உறுதி அளித்ததாக, டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.