விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் வெடித்த மோதல்...போலீஸ் குவிப்பால் பெரும் பரபரப்பு
வேடசந்தூரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து மக்கள் கட்சியின் சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. இதில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதில் ஒருவருக்கு கத்தி குத்து விழுந்தது. இந்த மோதலில் இரு தரப்பைச் சேர்ந்த 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.