ஓ.ஆர்.எஸ் என்பது நீர்ச்சத்து குறைபாட்டை உடனடியாக சரிசெய்யும் என்றும், அது வயிற்றுப்போக்கை சரி செய்யாது என்றும், அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோடை வெயில் காரணமாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியோர்கள், காலை 10 மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரை வெளியே வருவதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.