Child | குழந்தையை சுவரில் அடித்து..டிஷ்யூவை மூக்கில் திணித்த பயங்கரம்..கொடூரத் தாய் சொன்ன காரணம்
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலூர் பகுதியை சேர்ந்தவர் பெனிட்டா ஜெய அன்னா. 20 வயதாகும் இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அவரின் மூலம் சென்னையில் வேலைக்கு சென்றிருக்கிறார்.
பின் அங்கிருந்து இடமாறுதல் ஆகி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் சேர்ந்திருக்கிறார். அங்கு தான் இன்ஸ்டாகிராம் தோழியின் கணவரின் நண்பனான கார்த்திக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. ஆனால் அதற்கு பெனிட்டாவின் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. இதனால் கடந்த 1 வருடத்திற்கு வீட்டை எதிர்த்து கார்த்திக்கை கரம் பிடித்திருக்கிறார் பெனிட்டா.
திண்டுக்கல்லில் உள்ள கணவன் வீட்டிலேயே வசித்து வந்திருக்கிறார். அதனை தொடர்ந்து கர்ப்பம் தரித்த பெனிட்டாவுக்கு, கடந்த 42 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.
மாமியார் வீட்டில் சில நாட்கள் தங்கி இருந்த பெனிட்டா, திடீரென குழந்தையை தூக்கிக்கொண்டு கணவனுடன் பாலுரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் திண்டுக்கல்லில் உள்ள தாயை பார்த்து விட்டு வருவதாக சென்ற கார்த்திக், மறுநாள் காலை பாலூருக்கு வந்துள்ளார்.
நேராக குழந்தையை கொஞ்ச வீட்டிற்குள் சென்ற போது தான் கார்த்திக்கிற்கு காத்திருந்தது பெரும் அதிர்ச்சி... தொட்டிலில் குழந்தை மூச்சி பேச்சின்றி கிடந்திருக்கிறது. மேலும் தலை நெற்றியில் காயம் இருந்திருக்கிறது.
இதனை கண்டு திடுக்கிட்ட கார்த்திக், மனைவி பெனிட்டாவிடம் குழந்தைக்கு என்ன ஆனது ? எதனால் காயம் வந்தது? என கேட்டிருக்கிறார்.
அதற்கு அதற்கு பெனிட்டாவோ குழந்தைக்கு பால் கொடுக்கும் போது காலால் உந்தி கீழே விழுந்தது, இதனால் தான் காயம் ஏற்பட்டது என கூலாக பதில் கூறி இருக்கிறார்.
மேலும் குழந்தை ஏன் எந்த அசைவுமின்றி கிடக்கிறது என்று கேட்டதற்கு பால் குடித்தபோது நாசியில் பொறை ஏறி இருக்கலாம் என்று அசால்ட்டாக சொல்லிவிட்டு வீட்டு வேலையை பார்க்க சென்றுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த கார்த்திக், உடனே குழந்தையை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார். அங்கு மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்த போது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கைவிரித்திருக்கிறார்கள்.
இதனையடுத்து கருங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து தனியார் மருத்துவமனைக்கு சென்ற போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து உடற்கூராய்வுக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் தான் சம்பவத்தன்று கார்த்திக் ஊருக்கு சென்றிருப்பதை சாதகமாக கொண்டு அந்த கொடூர செயலை செய்துள்ளார். குழந்தையின் தலையையும் நெற்றியும் சுவற்றில் அடித்து தாக்கி இருக்கிறார். அதிலும் குழந்தை சாகாததால், சுவாச குழாயில் டிஸ்யூ பேப்பரை சுருட்டி அடைத்து வைத்துள்ளார். இதில் மூச்சு விடமுடியாமல் குழந்தை துடிதுடித்து உயிரிழந்து போயிருக்கிறது.