Chennai Theft Lady Arrest | சென்னை பெண்களை நடுங்கவிட்ட `தேவியை' தட்டி தூக்கிய போலீசார்

Update: 2025-09-10 09:21 GMT

சென்னையில் திறந்து இருக்கும் வீட்டில் கொள்ளையடித்தும், பெண்களிடம் கத்தி முனையில் செயின் பறித்தும் தொடர்ந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த பெண் கைது செய்யப்பட்டார். கொரட்டூரில் கடைக்கு சென்ற பெண்ணிடம், 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி 3 சவரன் தங்க சங்கலி மற்றும் 500 ருபாய் பணத்தையும் பறித்து சென்றுள்ளார். இந்நிலையில் போலீசார் சிசிடிவியை வைத்து ஆய்வு நடத்தியதில்,கொள்ளையில் ஈடுபட்டது திருவொற்றியூரை சேர்ந்த தேவி என்ற மண்ட தேவி என்பதும், அவர் மீது 12-க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து தேவியை அவரது வீட்டில் வைத்து கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்