Chennai | சென்னையில் ஒரு குடும்பத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய `கரண்ட் பில்’ - நடந்தது என்ன?
Chennai | சென்னையில் ஒரு குடும்பத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய `கரண்ட் பில்’ - நடந்தது என்ன?மூதாட்டி வீட்டிற்கு ரூ.8 லட்சம் மின்கட்டணம் - அதிர்ச்சி சென்னை திருவல்லீஸ்வரர் நகரில் வசித்து வரும் மூதாட்டியின் வீட்டிற்கு 8 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் பாடி திருவலீஸ்வரர் நகரில் வெற்றி விநாயகர் ஆலயத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும், ஜெகதாம்பிகை தெருவில் உள்ள சீனிவாசன் என்பவருக்கு ஒரு லட்சத்து 38 ஆயிரம் ரூபாயும் இந்த மாதம் மின் கட்டணமாக வந்துள்ளது. இது குறித்து திருமங்கலம் மேற்பார்வை பொறியாளர் சித்ரா சௌந்தரபாண்டியனிடம் கேட்டபோது ஊழியர் தவறுதலாக மின் பயன்பாட்டு அளவை எழுதி உள்ளதாகவும், அவரை பணியிடை நீக்கம் செய்து உரிய விளக்கம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்..