சென்னை OMR ரோட்டில் ஆட்டமாக ஆடிய 19வயது மாணவி - அநியாயமாக பறிபோன அப்பாவி உயிர்

Update: 2025-02-21 02:51 GMT

செங்கல்பட்டில் மாவட்டம் OMR சாலையில் கல்லூரி மாணவி தாறுமாறாக ஓட்டிய காரில் சிக்கிய நபர், பல அடி தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு, உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அசுர வேகத்தில் OMR சாலையில் காரை ஓட்டி வந்த சம்யுக்தா என்ற கல்லூரி மாணவி, திருப்போரூர் நோக்கி தண்டலம் பகுதியில் சாலையோரமாக பைக்கில் வந்த சுரேஷ்குமார் மீது மோதி காரோடு பல அடி தூரத்திற்கு அவரை இழுத்துச் சென்றுள்ளார். இதனால் உடல் நசுங்கி அதே இடத்தில்சுரேஷ்குமார் உடல் நசுங்கி உயிழந்தார். இதில் அப்பளம் போல நொறுங்கிய காரில் இருந்த, 4 மாணவிகள் உள்பட 6 பேரும் உயிர் தப்பினர். இதில், படுகாயமடைந்த ஈஞ்சம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஹேமலதா என்ற மாணவி கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்