Chennai | Metro | மெட்ரோ குறித்த அப்டேட்..சென்னை மக்களுக்கு குட் நியூஸ்...
மெட்ரோ குறித்த அப்டேட்.. சென்னை மக்களுக்கு குட் நியூஸ்...
மெட்ரோ இரண்டாம் கட்ட சேவை - பணிகள் விறுவிறுப்பு சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
பூந்தமல்லி - போரூர் இடையே சென்னையின் முதல் ஆளில்லா மெட்ரோ ரயில் சேவை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளது. 2026 ஜூன் மாதத்தில் போரூர் - கோடம்பாக்கம் ,
கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையேயான மெட்ரோ சேவை பயன்பாட்டிற்கு வருகிறது. 2027-ம் ஆண்டு மார்ச் மாதம் மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே அனைத்து பணிகளும் நிறைவடைந்து ஆறு பெட்டிகளுடன் ரயில் இயக்கப்பட உள்ளது. மெட்ரோ 3ஆவது வழித்தடத்தில் மாதாவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலும், 4ஆவது வழித்தடத்தில் பூந்தமல்லி - சென்னை கலங்கரை விளக்கம் வரையிலும் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. அதேபோல 5 ஆவது வழித்தடத்தில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை என மூன்று வழித்தடங்களில் 118.9 கிமீ தொலைவிற்கு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மெட்ரோ பணிகளின் விரிவாக்கமாக கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரையிலும், சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலும், பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரையிலும் உயர் மட்ட மேம்பாலங்கள் மூலமாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளது.