சென்னையில் தனியார் பஸ் டிரைவரை தாக்கிய வடக்கு நண்பர்கள் - அதிர்ச்சி வீடியோ

Update: 2025-08-07 09:52 GMT

பெரம்பூர் பகுதியை சேர்ந்த வடமாநிலத்தவர்கள் சிலர், தனியார் பேருந்தை புக் செய்து ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களை சுற்றிப்பார்க்க சென்றனர். இதற்காக 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பேசிய நிலையில், பெரம்பூர் ஜமாலியா வந்தடைந்ததும், பேசிய தொகையை விட 10 ஆயிரம் ரூபாய் குறைவாக கொடுத்ததாக கூறப்படுகிறது. மீதமுள்ள தொகையை தராததால் சில உடைமைகளுடன் ஓட்டேரி காவல்நிலையம் நோக்கி பேருந்து ஓட்டுனர்

செல்ல முயன்றார். அப்போது பேருந்தில் பயணித்தவர்கள், பேருந்தை மறித்து கண்ணாடிகளை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் பேருந்து ஓட்டுனர் பேருந்தை வழியிலேயே நிறுத்தி போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

பின்னர் ஓட்டுனர் ஓட்டேரி காவல்நிலையத்தில் வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது இருதரப்பையும் அழைத்து விசாரித்த போலீசார், மீதமுள்ள தொகையை தருமாறு கூறி அனுப்பிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்