சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த ரோஷன் ஆனந்தின் மருத்துவ குடும்பம் 7.73 கோடி ரூபாய் பண மோசடி செய்துவிட்டதாக தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிடம் புகார்கள் குவிந்துள்ளன. மத்திய குற்றப்பிரிவில் ஏற்கனவே புகார் கூறிய பாதிக்கப்பட்டவர்கள், தற்போது வீடியோ ஆதரத்துடன் மருத்துவ கவுன்சிலிலும் புகார் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில், மருத்துவர்கள் ரோஷன் ஆனந்த், அவரது தந்தை ருக்மகந்தன் மற்றும் மருத்துவர் உஷாராணி, மருத்துவர் ரோகித் குமார் ஆகியோருக்கு மருத்துவ கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.