Chennai | Attack |"ஆறிப்போன கறி"-சூடாக கேட்ட கூலித் தொழிலாளியின் மண்டை உடைப்பு..சென்னையில் அதிர்ச்சி
சென்னை கோயம்பேட்டில் தள்ளுவண்டி கடையில் கறி சூடாக இல்லை என கேட்ட கூலி தொழிலாளியின் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூரைச் சேர்ந்த தினேஷ், கோயம்பேட்டில் தங்கி கூலி வேலை செய்து வரும் நிலையில், அருகில் உள்ள தள்ளுவண்டிக் கடையில் உணவருந்த சென்றுள்ளார். அப்போது கறி சூடாக இல்லை என கூறியதால் வாய்த்தகராறு ஏற்பட்டு கடைக்காரர் சங்கர், அவரது மகன் சஞ்சய் மற்றும் தினகரனுடன் சேர்ந்து தினேஷை கட்டையால் தாக்கி மண்டையை உடைத்துள்ளனர். தினேஷ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.