பொன்னேரி ரயில் நிலையம் அருகே தேனீக்கள் கொட்டியதால், ரயில் பயணிகள் காயம் அடைந்தனர். ரயில் நிலையம் அருகே திடீரென சூழ்ந்து கொண்ட தேனீக்கள், அந்த வழியாக வந்தவர்களை கொட்டியதால், பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர். இதில், 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த சூழலில், பெரிய அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்குள், தேனீக்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.