தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நாகையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது புத்தூர் ரவுண்டானா அருகே கூட்டத்தை பயன்படுத்தி பெண் ஒருவரிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... பொய்கை நல்லூரை சேர்ந்த சுமதி என்பவர் தனது 4 பவுன் தங்க சங்கிலியை மகளிடம் கொடுத்துள்ளார்... மகள் அதை வாங்கி தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்த நிலையில், இதையெல்லாம் நோட்டமிட்டு செயின் திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது... அருகில் நின்றிருந்த வடமாநில நபர் தான் திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவரை அங்கிருந்தவர்கள் அடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்...