Chain snatch | இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு - போலீசார் கண்முன்னே நடந்த சம்பவம்
சென்னை குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே போலீசார் கண்முன்னே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 5 சவரன் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... கூடுதல் விவரங்களை செய்தியாளர் மீரான் வழங்க கேட்கலாம்...
குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே போலீசார் கண் முன்னே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 5,சவரன் தங்க சங்கிலி பறிப்பு*
பரபரப்பாக இருக்கும் ஜி.எஸ்.டி சாலையில் பெண்ணிடம் செயின் பறிப்பு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வால்டாக்ஸ் பகுதியில் வசித்து வருவார் ரவிக்குமார் (வயது-50) இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார்.இவரது மனைவி குணசுந்தரி (வயது-48) இருவரும் அவர்களது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் தாம்பரத்தில் உள்ள உறவின வீட்டில் நடக்க இருந்த மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொண்டு விட்டு அவரது வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் ஜி.எஸ்.டி வழியாக சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது குரோம்பேட்டை சிக்னல் அருகே சென்று கொண்டிருந்தபோது சப்தமின்றி மெதுவாக பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் குணசுந்தரி கழுத்தில் அணிந்திருந்த 5,சவரன் தங்கச் சங்கிலி அறுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து அந்த மரபு நகர் சென்றுவிட்டார்.
அதன் பின்னர் இதுகுறித்து குரோம்பேட்டை காவல் நிலையத்தில் உள்ள குற்றப் பிரிவு போலீசாகும் புகார் அளித்தார், புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சி.டி.வி கேமரா காட்சிகளை கைப்பற்றி செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.
பரபரப்பாக இருக்கும் குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் போலீசார் கண் முன்னே இருசக்கர வாகனத்தை சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.