இந்த வருசம் மட்டும் 60,000 பேருக்கு மத்திய அரசு வேலை - சென்னையில் குவிந்த இளைஞர்கள்
இந்த வருசம் மட்டும் 60,000 பேருக்கு மத்திய அரசு வேலை - சென்னையில் குவிந்த இளைஞர்கள்
இந்திய விமானப்படையில் அக்னி வீரர் தேர்வை முன்னிட்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இதனால் தாம்பரம் விமானப்படை மைதானத்தில் தடுப்புகள் அமைத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படையில் அக்னி வீரர் தேர்வு கடந்த சில நாள்களாக நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.
தற்போது கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தைச சேர்ந்தவர்களுக்கு மட்டும் தேர்வு நடைபெறகிறது.
தேர்வானது எழுத்துத்தேர்வு, உடல்தகுதித்தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை என 3 முறைகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் இந்திய விமானப்படையில் 4 ஆண்டுகள் பணியாற்றுவார்கள்.
அக்னிவீரர் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட உள்ளனர். இந்த பணியாளர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே அக்னிபாத்தின் கீழ் 4 ஆண்டுகள் பணி முடிந்தபிறகு 15 ஆண்டுகாலத்திற்கு தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் சேலையூர் பகுதியில் உள்ள விமானப்படை மைதானத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளனர். இவர்களின் அடையாள அட்டைகள், உடைமைகள் பரிசோதனைக்கு பின்பே விமானப்படை வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.