காரைகாலில் கடத்தல்காரரிடம் லஞ்சம் பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்காலை அடுத்த திருநள்ளாறு காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர் சிறப்பு உதவி ஆய்வாளர் பக்கிரிசாமி. இவர் சட்ட விரோதமாக வெளிநாட்டு சிகரெட் கடத்தலில் ஈடுபட்டு கைதான மணிகண்டன் என்பவரிடம் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார். இந்த நிலையில் பக்கிரிசாமி மீது மணிகண்டன் சென்னை சிபிஐ அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில் 5 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் திருநள்ளாறு காவல் நிலையத்திற்கு சென்று பக்கிரிசாமியிடம் தனி அறையில் வைத்து 10 மணி நேரம் விசாரணை நடத்தி பின்னர் அவரை கைது செய்தனர்.