சென்னை ஈசிஆர் நீலாங்கரை வைத்தியலிங்கம் சாலை சிக்னல் அருகே நிகழ்ந்த பயங்கர விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பைக்கில் பயணித்த நபர் மீது, அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியது. இந்த விபத்தில், பைக்கில் சென்றவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த நபரை வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் தாக்க முயன்றனர். போலீசார் உடனடியாக அவரை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்ற நிலையில் பொதுமக்கள் அந்த காரை அடித்து நொறுக்கினர்.