அதிமுகவுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்வோம் என TTV தினகரன் அதிரடி அறிவிப்பு
அதிமுக உடனான எங்களது சண்டைகளை எல்லாம் மறந்துவிட்டு, திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு, கூட்டணி கட்சிக்காக அமமுக பிரச்சாரம் செய்யும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சாத்தூரில் நடந்த அக்கட்சியின் செயல் வீரர்கள் மற்றும் செயல் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.