C. P. Radhakrishnan | 14 வது ஆண்டில் தந்தி டிவி - குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்த்து

Update: 2025-11-13 02:07 GMT

குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில், 83 ஆண்டுகள் பழமை வாய்ந்த தந்தி குழுமத்தின் முன்னணி செய்தி டிவி, 13 ஆண்டுகளாக தமிழர்களை தற்கால நிகழ்வுகளுடன் இணைத்து வைத்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி தொடங்கியதில் இருந்து, தமிழ் ஊடகத்துறையில் சிறப்பான பங்களிப்பை கொண்டிருப்பதாகவும், உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களிடையே உறுதியானை பிணைப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சீரிய சாதனைக்கு சொந்தக்காரர்களான, தந்தி டிவியின் அர்ப்பணிப்பு மிக்க செய்தியாளர்கள், படைப்பாற்றல் கொண்ட பணியாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் பணியின் வாயிலாக, ஊடகத்தின் வாயிலாக பொதுச்சேவையில் மிகுந்த ஆற்றலை வெளிப்படுத்த வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

நேர்மையான செய்தி, ஆயுத எழுத்து, மக்கள் மன்றம், கேள்விக்கென்ன பதில் போன்ற நிகழ்ச்சிகள் வழியாக தந்தி டிவி தொடர்ந்து நாட்டின் பிம்பத்தை பிரதிபலிப்பதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

தந்தி டிவி-யின் நிகழ்ச்சிகள் சமூக, அரசியல், ஆன்மீக மற்றும் பண்பாட்டு விழிப்புணர்வை தூண்டுவதை நோக்கமாக கொண்டிருப்பதாக கூறியிருக்கும் அவர், தந்தி டிவி செய்திகளை மட்டும் வழங்குவதல்ல, கோடிக்கணக்கான மக்களை ஊக்குவித்து, ஆரோக்கியமான விவாதங்களில் ஈடுபாடு கொள்ளச்செய்து, பண்பாடுகளை வளர்த்து, இது வரையிலும் கேட்காத குரல்களுக்கு மேடையமைத்து கொடுத்திருக்கிறது என நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தமிழ் ஊடக உலகின் பெருமையாக தொடர்ந்து விளங்க தந்தி டிவிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்திருக்கிறார். 

Tags:    

மேலும் செய்திகள்