கட்டுக்கட்டாக ரூ.2,000, ரூ.500 போலி ரூபாய் நோட்டுகள் - கோவையில் பகீர்

Update: 2025-06-09 02:44 GMT

போலி ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து ஏமாற்ற முயற்சி-ஒருவர் கைது

கோவை சூலூர் அருகே கருமத்தம்பட்டியில் போலியான 2 ஆயிரம், மற்றும் 500 ரூபாய் நோட்டு கட்டுகளைக் கொடுத்து ஏமாற்ற முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... உதயகுமார், இவரது தம்பி தயா, அண்ணன் லோகு, தாய் மாமன் செந்தில் குமார், நண்பர் இளவரசன் ஆகியோர் அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமாரிடம் 50 ஆயிரம் கொடுத்தால் ஒரு லட்சம் தருவதாகக் கூறி ஏமாற்றி பணத்தை வாங்கியுள்ளனர்... அந்த 50 ஆயிரத்திற்கு பதிலாக போலியான ரூபாய் நோட்டுகளை ரூபாய் நோட்டுக்கட்டின் முன்னும் பின்னும் வைத்து உள்ளே வெற்றுத் தாள்களை வைத்துக் கொடுத்துள்ளனர். முத்துக்குமார் புகாரின் பேரில் போலீசார் சோதனை நடத்தி, 4 மூட்டைகளில் போலி ரூபாய் நோட்டுகள், லேப்டாப், ஸ்கேனர், பணம் எண்ணும் மெஷின், மற்றும் பல மாநில ஆதார் கார்டுகளை பறிமுதல் செய்தனர். தப்பிய உதயகுமார் உள்ளிட்ட நால்வரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இளவரசன் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்