வீட்டினுள் நுழைந்து கழுத்தில் இருந்த செயினை அறுத்த கொடூரம் - கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே புலவனூர் கிராமத்தில் அடுத்தடுத்து 3 இடங்களில் மொத்தம் 12 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புலவனூர் கிராமத்தில் துக்க நிகழ்ச்சிக்காக வந்தவர்கள் உறங்கி கொண்டு இருந்தனர். அப்போது மர்மநபர்கள், சுபஸ்ரீ என்பவரின் 7 பவுன் தங்க நகையையும், அதே வீட்டில் இருசம்மாள் என்ற மூதாட்டியின் 3 பவுன் நகையையும் பறித்து விட்டு தப்பியோடினர். இதேபோல, ஏற்கனவே அதே கிராமத்தில் அப்ரின் என்பவரது 2 பவுன் நகையையும் மர்ம நபர்கள் பறித்து விட்டு தப்பியோடினர். இதுகுறித்து 3 பேர் தரப்பிலும், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், நகைகளுடன் தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.