பெண் போலீஸ் அதிகாரியிடமே பொறுக்கித்தனம் - நடுரோட்டில் ரவுடி செய்த மோசமான செயல்
சென்னையில் நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் சென்று போக்குவரத்து காவல் ஆய்வாளருடன் தகராறில் ஈடுபட்ட ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லூரி அருகில், கடந்த 31-ம் தேதி, போக்குவரத்து காவல் ஆய்வாளர் நித்திய உமா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் வந்த 3 பேர், மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. பெண் ஆய்வாளரிடம் தகராறில் ஈடுபட்ட நிலையில், இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ரவுடி டில்லிபாபு என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள விமல் உள்ளிட்ட 2 பேரை தேடி வருகின்றனர். பைக் உரிமையாளர் தேவராஜ் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.