நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற்றாலும், தமிழகத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் 90 சதவீதம் பேர் பணிக்கு வருகை தந்தனர். அரசு ஊழியர்களின் வருகை பதிவு குறித்து துறை வாரியான பட்டியல் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் 90 சதவீத ஊழியர்கள் பணிக்கு வந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பணிக்கு வராவிட்டால் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதியின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச்செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், பெரும்பாலான அரசு ஊழியர்கள் அன்றாட அலுவலில் ஈடுபட்டனர்.