மனதுக்குள் இருப்பதை சொன்ன பாக்யராஜ்

Update: 2025-08-18 03:50 GMT

"சாதி, மத பேதங்கள் நீங்குவதே உண்மையான சுதந்திரம்"

நாட்டில் சாதி, மத பேதங்கள் முற்றிலும் நீங்கும்போதுதான் உண்மையான சுதந்திரம் கிடைக்கும் என திரைப்பட இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், சூலூரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா நடைபெற்றது. இதில், திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் கலந்து கொண்டு, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். அப்போது, உண்மையான சுதந்திரத்தை உணர வேண்டுமென்றால், சாதி, மத பேதங்கள் நீங்கி, சமத்துவம் தழைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்