மாடல் உடையில் ஒய்யார நடைபோட்ட அழகிகள்

Update: 2025-09-08 10:46 GMT

புதுச்சேரியில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் 50க்கும் மேற்பட்ட மாடல் அழகிகள் கலந்து கொண்டு பொதுமக்களை வெகுவாக கவர்ந்தனர்.

புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகே தனியார் அமைப்பு சார்பில் ஃபேஷன் ஷோ நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகம், புதுச்சேரி, பெங்களூரைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாடல் அழகிகள் கலந்து கொண்டனர். ரேம்ப் வாக்கில் பாரம்பரிய உடை, மாடலிங் உடை என வண்ண ஆடைகள் அணிந்து அழகையும் நளினத்தையும் வெளிப்படுத்தி மாடலிங் அழகிகள் பார்வையாளர்களை கவர்ந்தனர். இந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்