பேனர்கள் அகற்றம்.. போலீசாருடன் தவெகவினர் வாக்குவாதம் - சென்னையில் பரபரப்பு
சென்னையில் த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றுவது தொடர்பாக போலீசாருடன் த.வெ.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஈஞ்சம்பாக்கம், சைதாப்பேட்டை, அரும்பாக்கம், அடையாறு உள்ளிட்ட இடங்களில், த.வெ.க.வினர் பேனர் மற்றும் கட்சிக்கொடிகளை வைத்திருந்தனர். இவை அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளதாகக்கூறி, போலீசார் அகற்ற முயன்றனர். அப்போது த.வெ.க.வினர் வாக்குவாதம் செய்தனர்