காவலர் குடியிருப்பில் பால்கனி பெயர்ந்து விழுந்து கார் சேதம்.. சென்னையில் பரபரப்பு
சென்னை கொண்டி தோப்பு காவலர் குடியிருப்பில் பால்கனி பெயர்ந்து விழுந்ததில் கார் சேதமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பயன்பாட்டில் இல்லாத பழைய கட்டிடத்தில் 3வது மாடியின் பால்கனி பெயர்ந்து விழுந்துள்ளது..இரவில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் பால்கனி பெயர்ந்து விழுந்ததாக கூறப்படும் நிலையில் நல்வாய்ப்பாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து ஏழு கிணறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.