3 வயது சிறுமியை கடத்தி சென்ற ஆட்டோ ஓட்டுநர்.. வெளியான அதிர்ச்சி CCTV காட்சி..
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில்வே ஸ்டேசனில் மத்தியபிரதேசம் மாநிலம் செல்ல பெற்றோர்களுடன் அமர்ந்து இருந்த 3 வயது சிறுமிக்கு உணவு வாங்கி கொடுப்பதாக கூறி சிறுமியை கடத்தி சென்ற ஆட்டோ டிரைவரை குமரி தனிப்படை போலீசார் 2 மணி நேரத்தில் கைது செய்து சிறுமியை மீட்டனர். .சிறுமியை எதற்காக கடத்தி செல்லப்பட்டார் என ஆட்டோ டிரைவர் யோகேஷ் குமாரிடம் கோட்டார் போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது தப்பியோட முயன்ற யோகேஷ் குமார் தடுக்கி விழுந்து கால் முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது, கால் முறிந்த நிலையில் யோகேஷ் குமார் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்."