மண் அள்ளுவதை தடுத்த பெண் மீது டிராக்டரை ஏற்றி கொல்ல முயற்சி

Update: 2025-05-01 05:40 GMT

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே மண் அள்ளுவதை தடுத்த பெண் மீது டிராக்டரை வைத்து மோதியவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

சென்னிமலை அருகே முருங்கந்தொழுவு பகுதியை சேர்ந்த தங்கவேலு புறம்போக்கு நிலத்தில் இருந்து சட்டவிரோதமாக மண் அள்ளி வந்த நிலையில், அவரது டிராக்டரை ஒரு பெண் வழி மறித்து வாக்குவாதம் செய்திருக்கிறார். அப்போது அந்த பெண்ணை இடித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிய தங்கவேலு மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்