"தமிழகத்தில் படித்தவர்களே இல்லையா? ஏன் இந்திக்காரர்களுக்கு வேலை?" - கொதிக்கும் மக்கள்
"தமிழகத்தில் படித்தவர்களே இல்லையா?
ஏன் இந்திக்காரர்களுக்கு இங்கு வேலை?"
கடலூர் கோர விபத்து... கொதிக்கும் மக்கள்
கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்தை நேரில் பார்த்த செம்மங்குப்பம் இளைஞர், ரயில்வே கேட் மூடப்படாததே விபத்திற்கு காரணம் எனக் குற்றம்சாட்டினார். கடலூரில் அதிகரித்து வரும் பள்ளி வாகன விபத்துகளை தடுக்க ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்திய பொதுமக்கள், விபத்திற்கான காரணத்தை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.