ஆரெம்கேவி சார்பில் 15 புதிய பட்டுப் புடவைகள் அறிமுகம்
தீபாவளி மற்றும் பண்டிகை காலத்தை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டையில் ஆரெம்கேவி சார்பில் 15 புதிய பட்டுப் புடவைகளை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது... கடந்த 100 ஆண்டுகளாக 110க்கும் மேற்பட்ட பிரத்யேக பட்டு புடவை ரகங்களை அறிமுகம் செய்துள்ள ஆரெம்கேவி, அதன் 101ஆம் ஆண்டில் வரக்கூடிய விழாக்காலத்தில் 15 புதிய பட்டுப் புடவைகளை அறிமுகம் செய்துள்ளது... 2025-ன் விழாக்கால கொண்டாட்டத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த புடவை ரகங்கள் ஜப்பானிய கலை மற்றும் இந்திய கலாச்சாரங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இயற்கை வண்ண செவ்வந்தி பூ பட்டு புடவை, ஷா ஷி கோ ரிவர்சிபிள் பட்டு புடவை, ஜப்பான் கோர்வை, மவுண்ட் ஃபுஜி, நேச்சுரல் ஃபிச் கிரேடியன்ட், மோக்கா மெளஸ், வான் கோ லினோ, ராசலீலா பட்டுப் புடவை, டபுளா லினோ வர்ணா, இயற்கை வண்ண முப்பாகம், கிரேடியன்ட் வர்ணா, கொட்டடி கட்டம், திரிகோண மாம்பழ புட்டா, குயில் கண் கோர்வை, குமோ கோர்வை உள்ளிட்ட 15 புதிய ரகங்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆரெம்கேவி இயக்குநர் சங்கர் குமாரசாமி, இயற்கை பொருட்களை கொண்டு வண்ணம் ஏற்றப்பட்டு, கோர்வை முறையில் செவ்வந்தி பூ பட்டு புடவை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பெண்களை கவரும் தனித்துவமான புடவைகள் குறித்தும் விளக்கினார்...