EB employee Threats | Polur | ViralVideo | கரண்ட் கட் - புகார் கொடுத்தவரின் வீடுதேடி போய் மிரட்டல்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே கரண்ட் இல்லை என புகார் அளித்தவரை வீடு தேடிச்சென்று மின் ஊழியர் மிரட்டியுள்ளார். கீழ்ப்பட்டு கிராமத்தில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதாக கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் ஒருவர் புகார் அளித்துள்ளார். புகார் அளித்தவரின் வீட்டிற்குச் சென்ற மின்வாரிய ஊழியர், புகார் அளிக்கக் கூடாது என மிரட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.