வாளை பரிசாக கொடுத்த நிர்வாகி..கடுமையாக கண்டித்த கமல்
மக்கள் நீதி மய்யம் நிர்வாகி வழங்கிய வாளை வாங்க மறுத்த அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அந்த நிர்வாகியை கண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடிய கமல், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்... கட்சி நிர்வாகிகள் அவருக்கு இனிப்புகள், புத்தகங்கள் வழங்கி வாழ்த்து பெற்றனர்... குறிப்பாக, திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதனிடையே நிர்வாகி ஒருவர் கமலுக்கு வாளை பரிசாக வழங்கினார்...ஆனால் வாளை வாங்க மறுத்த கமல்ஹாசன், ஆயுதம் கையில் இருக்கக் கூடாது... கீழே தான் இருக்க வேண்டும் என நிர்வாகியை கண்டித்தார்...
ஜூலை 25 ஆம் தேதி கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கிறார். அதற்குப் பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பிரமாண்ட மாநாடு, சுற்றுப்பயணம் என 2026 சட்டமன்ற தேர்தல் பணியில் அதிக கவனம் செலுத்தி தீவிர அரசியலில் கமல்ஹாசன் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பேச்சை குறைத்து செயல்பாட்டை அதிகரிக்க வேண்டும் என நிர்வாகிகளிடம் கமல்ஹாசன் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது...