வயலுக்கு சென்ற பெண்..காலடியில் கிடந்த எமன் - துடிதுடித்து கொடூர பலி

Update: 2025-09-10 15:58 GMT

பெரம்பலூர் அருகே வயலில் அறுந்து கிடந்த வயரை மிதித்ததால், மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்தார். நெடுவாசலை சேர்ந்த ரேவதி தனது விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள சோளத்திற்கு மருந்து அடிக்க சென்றபோது அறுந்து கிடந்த வயரை மிதித்ததாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விவசாய நிலங்களில் தாழ்வாக மின்கம்பி செல்வதும், அதை மின்சாரத் துறையினர் முறையாக பராமரிக்காததும் தான் இதற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்