5 நாட்களே ஆன குழந்தை- லட்சங்களில் விற்ற பெண் சித்த மருத்துவர்.. சிதம்பரத்தில் அதிர்ச்சி

Update: 2025-04-22 10:22 GMT

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, பிறந்து 5 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு விற்ற பெண் சித்த மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர். சொக்கநாதன்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவர் வீட்டில், பச்சிளம் குழந்தை இருப்பது குறித்து அப்பகுதியினர் child லைன் அமைப்பிற்கு புகார் செய்தனர். இதையடுத்து அவர்கள் விசாரித்ததில், குழந்தையை ஒன்றரை லட்சம் கொடுத்து அந்தப் பெண்ணின் உறவினர் வாங்கி கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து குழந்தையை மீட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி, கடலூரை சேர்ந்த சித்த மருத்துவர் சத்ய பிரியாவை கைது செய்தனர். இவர் தவறான உறவில் பிறக்கும் குழந்தைகளை இதுபோன்று விற்பனை செய்து வந்தது தெரியவந்ததை அடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்