ஒரு பெண்ணுக்கு 2 மாப்பிள்ளைகள் - மிரள வைத்த திருமணம்.. வியக்க வைக்கும் விஷயம்..
இமாச்சல் மாநிலம் சிர்மார் பகுதியில் உள்ள குன்ஹாட் கிராமத்தில், ஒரே பெண்ணை பிரதீப் மற்றும் கபில் நேகி என்ற இரு சகோதரர்கள் திருமணம் செய்து கொண்டது பேசு பொருளாகியுள்ளது. ஹாட்டி எனப்படும் சமூகத்தில் காலம் காலமாக இத்தகைய திருமணம் நடைபெற்று வந்ததாகவும், தற்போது நடைமுறையில் இல்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் இம்முறை "உஜ்லா பக்ஷா" என்று அழைக்கப்படுகிறது.
இதில் வியக்க வைக்கும் விஷயம் என்னவென்றால் பிரதீப், கபில்நேகி இருவரும் படித்து நல்ல வேலையில் உள்ளவர்கள்.