அமைச்சர் காந்தி விசிட்டின் போது திடீரென பவர்கட் ஆனதால் பரபரப்பு
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை அமைச்சர் பார்வையிட்டு கொண்டிருந்தபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. ராணிப்பேட்டை, அரக்கோணம் அருகே தனியார் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்டார். மருத்துவ முகாமில் கலந்து கொண்ட நபர்களிடம் அமைச்சர் விசாரித்து கொண்டிருந்தபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனை பொருட்படுத்தாமல் அமைச்சர் பயனர்களிடம் மருத்துவ முகாம் பற்றி விசாரித்து சென்றார்.