சுற்றுலா சென்ற இடத்தில் திடீரென அடித்துக்கொண்டு வந்த வெள்ளம் - பரிதாபமாக இறந்த உயிர்
Kodaikanal | சுற்றுலா சென்ற இடத்தில் திடீரென அடித்துக்கொண்டு வந்த வெள்ளம் - பரிதாபமாக இறந்த உயிர்
கொடைக்கானல் அடுத்த ஓராவி அருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மதுரை அவனியாபுரத்தில் இருந்து நண்பர்களுடன் சுற்றுலா வந்த இளைஞர் பரத் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நண்பர்களுடன் அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பரத் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இதையடுத்து, உள்ளூர் மக்கள் உதவியுடன் சுமார் 4 மணி நேரம் தேடிய நிலையில் பரத் சடலமாக மீட்கப்பட்டார். பின்னர், தகவலறிந்து வந்து இளைஞரின் உடலை மீட்ட போலீசார், விசாரித்து வருகின்றனர். பரத்துடன் பிறந்த இருவர் ஏற்கனவே வெவ்வேறு சம்பவங்களில் பலியான நிலையில், பரத்தும் தற்போது உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.