வீட்டின் முன் கிடந்த மண்டை ஓடு-"தூங்கி எந்திரிச்சு வந்து பார்த்தா.."அதிர்ச்சி தகவல்
சென்னை வடபழனியில் உள்ள வீட்டின் வாசலில் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வடபழனி சோமசுந்தர பாரதியார் நகர் நான்காவது தெருவை சேர்ந்தவர் கருணாகரன். கால்நடைகளுக்கான மருந்துகள் விற்பனை செய்யும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் காலை தூங்கி எழுந்து வெளியே வந்து பார்த்தபோது இவரது வீட்டு வாசலில் மனித மண்டை ஓடும், எலும்புகளும் இருந்துள்ளன. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கருணாகரன் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இந்த விஷம செயலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கம்பக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். .