சுப நிகழ்ச்சியில் DJ இசைக்கு நடனமாடியவர் உயிரிழப்பு - பதற வைக்கும் பகீர் காட்சி

Update: 2025-05-29 02:54 GMT

சென்னை தண்டையார்பேட்டையில் நண்பனின் திருமண வரவேற்பு விழாவில், மதுபோதையில் நடனம் ஆடிய நபர், கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த ஷாம் என்பவரின் திருமண வரவேற்பு விழாவில், அவரது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் மதுபோதையில் நடனம் ஆடியுள்ளார். அப்போது, நண்பர்களுடன் DJ இசை கச்சேரியில் நடனமாடிய அவர், திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். திருமண வீட்டில் நடந்த இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்