திருப்புவனம் அஜித் வழக்கில் CBI விசாரணையில் திருப்பம்
திருப்புவனம் அஜித் குமார் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, நிகிதாவிடம் இருந்து கார் சாவியை வாங்கியது அஜித் குமார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், கார் சாவியை முதலில் வாங்கியது காவலாளி முருகன் என்பது தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்த நாளன்று, கோயிலுக்கு தனது தாயார் சிவகாமியுடன் வந்த நிகிதா கார் சாவியை முதலில் தன்னிடம் கொடுத்து காரை நிறுத்த சொன்னதாக சிபிஐ விசாரணையின்போது முருகன் தெரிவித்துள்ளார். அந்த கார் சாவியை தாம் அஜித் குமாரிடம் கொடுத்ததாகவும், அவர் யாரிடம் கொடுத்தார் என தனக்குத் தெரியாது என்றும் முருகன் தெரிவித்துள்ளார்.