உடல் கருகி பலியான 8 பேர் - துடிதுடிக்கும் 5 உயிர்கள்?.. கதறும் உறவினர்கள்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பாட்டாசு ஆலை வெடி விபத்தில், 8 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னக்காமன்பட்டியில் கமல்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.. இந்த நிலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 8 அறைகள் தரைமட்டமானதுடன், 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்த நிலையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆலையின் போர்மேனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.