ஓடும் பள்ளிப் பேருந்தில் இருந்து கீழே விழுந்த 5 வயது சிறுவன் - தாய் சொன்ன அதிர்ச்சி தகவல்

Update: 2025-06-06 05:11 GMT

செங்கல்பட்டு அருகே பள்ளி பேருந்தில் இருந்து கீழே விழுந்த யூகேஜி மாணவன் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம், பெரிய வையாவூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது ஐந்து வயது மகன் ஜீவா அருகில் உள்ள தனியார் பள்ளியில் யூகேஜி படித்து வருகிறார். இந்த நிலையில் பள்ளி பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஜீவா, இருக்கையில் அமர்ந்தபடியே தூங்கிய நிலையில், ஓடும் பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுவன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஓட்டுநர் பேருந்தின் கதவை மூடாமல் இயக்கியதே விபத்திற்கு காரணம் என புகார் எழுந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்