3 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் - வெளியான தகவல்
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு நிறைவடைந்த நிலையில், இறுதி நிலவரப்படி 3 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பொறியியல் சேர்க்கைக்கான இணையதள பதிவு நிறைவடைந்த சூழலில், 3 லட்சத்து இரண்டாயிரத்து முன்னூற்றி எழுபத்தி நான்கு (3,02,374) மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், 2 லட்சத்து 49 ஆயிரம் மாணவர்கள் கட்டணம் செலுத்தியுள்ளதாகவும், 2 லட்சத்து 26 ஆயிரம் மாணவர்கள் சான்றிதழ்களை முழுமையாக பதிவேற்றியுள்ளதாகவும் கூறியுள்ளார். பதிவு செய்த மாணவர்கள் கலந்தாய்வு கட்டணங்களை செலுத்துவதற்கு வரும் 9-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.