காவல் துறை செயல்பாடுகளை அறிய பயிற்சி ஐபிஎஸ் அதிகாரிகள் சென்னை வருகை
தெலங்கானா மாநிலத்தில் இருந்து தமிழக காவல் துறையின் பணிகள் குறித்து அறிந்து கொள்ள 26 ஐ.பி.எஸ். பயிற்சி அதிகாரிகள் சென்னை வந்துள்ளனர். தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள இந்திய போலீஸ் சர்வீஸ் பயிற்சி அகாடமியில் பயிற்சி பெறும் ஐ.பி.எஸ். அதிகாரிகள், ஒவ்வொரு மாநிலத்திலும் காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து அங்கு சென்று அறிந்து கொள்வார்கள். அதுபோல் தமிழ்நாடு காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள 26 ஐ.பி.எஸ். பயிற்சி அதிகாரிகள் ஐதராபாத்தில் இருந்து விமானத்தில் சென்னை வந்தனர். அவர்களை தமிழ்நாடு காவல் துறையினர் வரவேற்று அழைத்து சென்றனர். தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி.யை சந்தித்து பேசும் அவர்களுக்கு தமிழ்நாட்டில் போலீசாரின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட உள்ளது.